Sunday, 5 June 2022

Admission of students in Government Music School begins! You can study for a scholarship, with no fees for training! Free bus for students!

 

Admission of students in Government Music School begins! You can study for a scholarship, with no fees for training! Free bus for students!





சேலம் அரசு இசைப் பள்ளியில் (Government Music School) மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆட்சியர் செ.கார்மேகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில்பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள் வார நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள். பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை, சேர்க்கை கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ மாணவியருக்கு இலவச பேருந்து பயணச்சலுகை அளிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment